×

ஹமாஸ் மீதான போர் பல மாதங்கள் தொடரும்: இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் தகவல்

டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இஸ்ரேலின் போர் இரண்டு மாதங்களை கடந்து மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது. இஸ்ரேலுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு அளித்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

காசா மீதான போரை நிறுத்துவதற்கான அட்டவணை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் ஹமாசை அழிப்பதற்கு பல மாதங்கள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக ஹமாஸ் குழுவை நசுக்கும் வரை ராணுவ தாக்குதலை தொடருவோம் என்று இஸ்ரேல் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

The post ஹமாஸ் மீதான போர் பல மாதங்கள் தொடரும்: இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Hamas ,Israel ,Defense Minister ,Tel Aviv ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...